Slander about the Chief Minister; A.D.M.K. IT division executive jailed

Advertisment

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சிவகிரியை சேர்ந்தவர் கவுதம். அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் உள்ளார். எனவே சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்கள், கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கவுதம் அண்மையில் தனது இன்ஸ்டாகிராமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு வீடியோவை பகிர்ந்துள்ளார். இதையடுத்து சிவகிரி போலீசார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் வைத்து நேற்று கவுதமிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ஏராளமான அதிமுகவினர் குவிந்தனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இது பழிவாங்கும் நடவடிக்கை என அ.தி.மு.க.வினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதற்கிடையே கவுதமிடம் சைபர் கிரைம் போலீசார் 6 மணி நேரம் விசாரணை நடத்தி துருவித் துருவி அவரிடம் கேள்வி கேட்டனர். அதன் பின்னர் கவுதம் மீது 153,420,469,505/2 மற்றும் 66டி ஐடி சட்டம் 2000 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் கவுதம் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.