Advertisment

ஆர்.பி.வி.எஸ். மணியன் அதிகாலையில் கைது!

Slander about Ambedakar! R.P.V.S. Maniyan Arrested

Advertisment

திருவள்ளுவர், அம்பேத்கர், திராவிட இயக்க அறிஞர்கள் உள்ளிட்டோர்குறித்து இந்துத்துவா சிந்தனையாளரும், ஆன்மீக பேச்சாளரும், வி.எச்.பி. முன்னாள் மாநிலத் துணைத் தலைவருமான ஆர்.பி.வி.எஸ். மணியன் அவதூறாகப் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் கடந்த இரு தினங்களாக வைரலாகி வந்தது. இவருக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவந்தனர். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் புகார்களும் எழுந்தன.

சென்னை தியாகராயர் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் இவர் சட்டமேதை அம்பேத்கர் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்தார். இதன் காரணமாக அவர் மீது சென்னை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார் ஆர்.பி.வி.எஸ். மணியனை அவரது சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்தனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ambedkar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe