சிதம்பரம் சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட காசு கடை தெரு பகுதியில் பொதுமக்கள் கொட்டும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் வியாழக்கிழமை(30.1.2025) காலை சுத்தம் செய்துள்ளனர். அப்போது ஒரு பையில் மனித தலை ஓடு மற்றும் கை எலும்பு கால் எலும்புகள் உடன் எலுமிச்சை பழம் தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரம் நகர காவல் துறையினர் இருந்த எலும்புகளை கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். குப்பை கொட்டும் பகுதியில் மனித எலும்புகள் எலுமிச்சம்பழம் தேங்காய் கயிறு இருந்ததால் மாந்திரீகம் செய்யப்பட்டது போல் இருந்ததால் அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.