Skull around town; Villagers in fear

கள்ளக்குறிச்சியில் கிராமம் ஒன்றில் ஊரின் எல்லையைச் சுற்றி 3 இடங்களில் மண்டை ஓடு, மஞ்சள், சிவப்பு, பூசணிக்காய் உள்ளிட்ட வைத்திருந்தது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக போலீசாரிடம் பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.

Advertisment

கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பெரியப்பட்டு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வழக்கமாக பயன்படுத்தும் சாலையில் வேலைக்குச் சென்ற பொழுது ஊர் எல்லைப் பகுதியில் பயத்தை ஏற்படுத்தும் வகையில் பூக்கள் கொட்டப்பட்டு மஞ்சள், சிவப்பு, உள்ளிட்டவை தூவப்பட்டு மனித மண்டை ஓடுகள் கிடந்துள்ளது.ஊரின் எல்லைப் பகுதிகளான 3 இடங்களில் இதேபோல் மண்டை ஓடுகள் வைக்கப்பட்டு இருந்தது கிராம மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

இரவில் நடந்த இந்த சம்பவத்தால் உள்ளூர் வாசிகள் யாரும் எல்லையைத் தாண்டி வெளியே போகாமல் ஊருக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். யாரோ சூனியம் வைத்திருக்கிறார்கள் என அச்சத்தில் உறைந்த பொதுமக்கள் வயல் வழியாகநடந்துசென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 'தூக்கி போட்டு வேலையை பாருங்க, கிராமத்தில் என்ன செய்வார்கள் என்றால் மூளைக்கு மூளை எலுமிச்சை பழம் வைப்பார்கள். பூசணிக்காய் வெட்டுவார்கள்.மிளகாய் எல்லாவற்றையும் போட்டு எரிப்பார்கள். கேட்டால் பேய் ஓட்டி விட்டேன் என்பார்கள். இதெல்லாம் மூடநம்பிக்கை தூக்கிப் போட்டு வேலையை பாருங்க' என போலீசார் கூறி அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் மனித மண்டை ஓடுகள் வைத்து பூஜை செய்யப்பட்ட சம்பவத்தால் அச்சத்தில் உறைந்துள்ளது பெரியப்பட்டு கிராமம்.

Advertisment