‘ஸ்பீட் ஸ்கேட்டிங் சேம்பியன்ஷிப் 2024’ போட்டி கடந்த மாதம் 25ஆம் தேதி திருவள்ளூரில் நடைபெற்றது. டி.டி.எஸ்.எஸ். (TDSS) நடத்திய இந்த போட்டியில் 14 வயதுக்குட்பட்ட, ஃபேன்ஸி இன்லைன் பிரிவில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கம் வென்று சேம்பியன்ஷிப் ட்ராபியை கைப்பற்றியுள்ளார் பி.எஸ். கௌரவ் ஹசன். மேலும் மாநில அளவிலும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
பி.எஸ். கௌரவ் ஹசன் அயனம்பாக்கம் ‘தி ஸ்க்ராம் அகாடமி’-ல் (The Schram Academy) படித்து வருகிறார். ‘எஸ்.எஸ். அகாடமி’ மாஸ்டர் ரமேஷ் பாபுவிடம் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.