Skip to main content

சிக்ஸ்டி ப்ளஸ் முதியோர் மேலாண்மை நிகழ்ச்சி; அறுபது வயதை தாண்டிய சாதனையாளர்கள் கெளரவிப்பு

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

Sixty Plus Elderly Management Programme; Achievements beyond the age of sixty are honoured

 

கடந்த மார்ச் 03, 2023 அன்று 60பிளஸ் லைப் என்னும் வயது முதிர்ந்தவர்களுக்கான (குறிப்பாக அறுபது வயது தாண்டிய) கலை மற்றும் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி முத்தமிழ் பேரவை, அண்ணாமலைபுரத்தில், சென்னையில் நடந்து முடிந்தது. 60பிளஸ் இந்தியா (60Plus India) என்னும் முதியோர் மேலாண்மை நிறுவனம்  இந்த நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை செய்துள்ளது.

 

நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பு விருந்தினராக ட்ரீம் தமிழ்நாடு இணை நிறுவனர், கிஸ்ப்பிலோ நிறுவன தலைமை நிர்வாகி மற்றும் கிரசன்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சிலின் (Cresent Innovation and Incubation Council) தலைமை நிர்வாக அதிகாரி, PMI யின் தலைவரான திரு.பர்வேஸ் ஆலம் அவர்களும் கலந்துகொண்டனர்.

 

இந்நிகழ்வு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சாதனைகள் மற்றும் கலாச்சாரத் திறமைகளையும் கொண்டாடுவதுடன், அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் தளத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளது. விழாவை சிறப்பித்த மதிப்புமிக்க விருந்தினர்கள், சமுதாயத்தில் முதியோர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் சமுதாயத்திற்கு அதன்வழி ஏற்படுத்தும் தாக்கத்தையும் சுட்டிக்காட்டி பேசினார். விருது பெற்றவர்களில் ஓய்வுபெற்ற நூலகர்  பாலம் கல்யாணசுந்தரம் (குழந்தைகளுக்கான சமூக நல அமைப்பான “பாலம்” என்னும் அமைப்பின் நிறுவனர் , தன் ஓய்வூதிய நீதியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியவர். காண்ட்ராக்ட் குழந்தைநல மருத்துவர் டாக்டர் எஸ்.சசிகலாதேவி, தன் 65 வயதிலும் நீச்சல் வீராங்கனையாக சமூகத்தில் பெரும் தாக்கத்தை படைத்த இவர்களை போன்றோர் மக்களுக்கு பெரும் உதாரணமாக திகழ்கின்றனர். நிகழ்வின் முக்கிய பகுதியாக, 60பிளஸ் நிறுவனத்தின் 60பிளஸ் இந்தியா மொபைல் செயலியை கிருத்திகா உதயநிதி காட்சிப்படுத்தினார்.  இந்த செயலி முதியோர்களுக்கான அன்றாடப் கடமைகள்  மற்றும் செயல்பாடுகளை நிர்வகிப்பதை திறம்பட செயல்படுத்த பல்வேறு அம்சங்கள் பயனாளர் இலகுவாக அமைத்திருப்பதே இந்த சிறப்பம்சம்.

 

60 வயதிற்கு மேற்பட்டவர்களின் சாதனைகளைக் கௌரவித்து  கொண்டாடி  நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவுப்படுத்தினர். நிகழிச்சியில் பங்குபெற்ற விருந்தினர்களும், பார்வையாளர்களும் மனமகிழ்ச்சியுடன் தங்கள் தனி திறமைகளை வெளிக்கொணரும் உத்வேகத்துடன் நிகழ்ச்சியை நிறைவுசெய்து சென்றனர். இந்த நிகழ்வு மகிழ்ச்சியான வாழ்கையை வாழ்வதற்கு முதுமை என்றுமே தடையில்லை என்பதை நிரூபித்து காண்பித்துள்ளது.

 

60பிளஸ் இந்தியா மொபைல் செயலியின் வளர்ச்சி, முதியோர் வாழ்கையை இன்டர்நெட் துணையுடன் மேம்படுத்தும் முயற்சி. முதியவர்களின் நல்வாழ்வை 60பிளஸ் இந்தியா நிறுவனம் தனது கடமையாக கருத்துவதற்கான சான்றாகும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.