Advertisment

துக்க வீட்டிற்கு வந்த பெண்களுக்கு நேர்ந்த சோகம்; திட்டக்குடியில் பரபரப்பு

Six women were injured in an electric shock at a funeral home and were admitted to hospital

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கீழ் செறுவாய்கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயது முருகானந்தம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு விபத்தில் மரணமடைந்தார். அவரது உடலைச் சொந்த கிராமமான கீழ் செறுவாய் கிராமத்திற்கு அவரது உறவினர்களால் கொண்டு வரப்பட்டுஅஞ்சலிக்காக பிரீசர் பாக்ஸில்வைக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், இறந்து போன முருகானந்தம் உடலுக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள்அஞ்சலி செலுத்த வருகை தந்தனர். அவர்களில் சிலர் சவப்பெட்டியை சுற்றிலும் நின்று கொண்டு ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தனர். அப்போது சவப்பெட்டியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை யாரும் எதிர்பாராத நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் கனகவல்லி, ராஜாம்பாள், லலிதா, கௌரி, மகேஸ்வரி, கருப்பாயி உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

Advertisment

உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடிஅரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் சவப்பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகபெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Cuddalore Women
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe