11 பணியிடங்களுக்கு குவிந்த 6 ஆயிரம் பேர்..!

Six thousand people attended interview for eleven vacancy

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அதிக காலி பணியிடங்கள் உள்ளன. அந்தப் பணியிடங்களில் படித்த தகுதியானவர்களை நியமிக்காமல், அரசு இழுத்தடித்துக் கொண்டேயிருக்கிறது என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் படித்த பட்டதாரி ஆண்களும் பெண்களும் வேலை கேட்டும் போராடி வருகின்றனர். இதனால் எப்போதாவது ஒன்றிரண்டு பணியிடங்களுக்கு அரசு அறிவிப்பு வெளியிடும்போது ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் செய்வர்.

அந்தவகையில், குமரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் துறையில் டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களில் 11 இடங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு, நேற்று (22 பிப்.) நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் நாஞ்சில் அரங்கில் 4 குழுக்களாக நோ்காணல் நடந்தது. இதையொட்டி காலை 8.30 மணியில் இருந்தே மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து படித்த இளைஞர்களும் இளம் பெண்களும் குவிந்தனர். கொஞ்ச நேரத்தில் கலெக்டா் அலுவலகம் மாநாடு போல் காட்சியளித்தது. இளைஞர்கள் கலெக்டா் அலுவலகத்தைச் சுற்றி ரயில்வண்டி போல் பலமணி நேரம் வரிசையில் நின்றனர்.

Six thousand people attended interview for eleven vacancy

11 இடங்களுக்கு சுமார் 6 ஆயிரம் பேர் வந்திருந்தது காண்போரை அதிர்ச்சியடைய வைத்தது. மேலும் அந்தப் பணியிடங்களுக்கு கலை மற்றும் பொறியியலில் முதுகலை படித்த ஏராளமானோர்வந்திருந்தனர்.

government job Kanyakumari
இதையும் படியுங்கள்
Subscribe