தமிழகத்தில் அமையவுள்ள ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.137.16 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 23 மருத்துவக் கல்லூரிகள் இருந்து வரும்நிலையில், மேலும் ஆறு மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய சுகாதாரத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ள மத்திய அரசு, திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கல்லூரிகள் அமைக்க முதற்கட்டமாக ரூ.137.16 கோடியை நிதியாக ஒதுக்கியுள்ளது.