Advertisment

மக்கள் நடமாடும் பிரதான பகுதியில் ஆறு அடி நீளம் கொண்ட பாம்பு!

six-foot-long snake in the main area where people walk

வேலூர் மாநகரத்துக்குட்பட்ட மையப் பகுதியான தென்னை மர தெருவில் கடைகள் வீடுகள் நிறைந்து எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கக்கூடிய பிரதான பகுதி. இந்த பகுதியில் உள்ள காலியாக இருந்த வீட்டுமனையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போக்கு காட்டி வந்த ஆறு அடி நீளம் கொண்ட பாம்பு ஒரு மாதத்திற்கு பிறகு வெளியே வந்தது. அந்த பாம்பைப் பிடிப்பதற்காக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டு மனையில் உள்ள பாம்புகளை பிடிக்க முடியாது எனத் திரும்பிச் சென்றனர். அதன்பின் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து பாம்பு பிடிப்பவரை வரவைத்து தீயை மூட்டி பாம்பை புதரில் இருந்து வெளியே வரவைத்து சுமார் ஆறு அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டன.

Advertisment
snake Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe