ஆறு மாவட்டங்களில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை!

six districts friends of police trichy dig sathankulam issues

விழுப்புரம் மாவட்டத்தில் காவல் பணியில் ஈடுபட ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூகப் பணிகளுக்கு மட்டுமே பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் பயன்படுத்தப்படுவார்கள் என விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

அதேபோல் திருச்சி சரகத்தில் உள்ள திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தற்காலிக தடை விதித்து திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார்.

சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ்- மகன் பென்னிக்ஸ் விவகாரத்தில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் சிக்கியதையடுத்து, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ariyalur friends of police Perambalur trichy villupuram
இதையும் படியுங்கள்
Subscribe