Advertisment

Six arrested for falsely reporting worm infestation in Sambar

சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் வழங்கப்பட்ட சாம்பாரில் புழு இருந்ததாகப் பொய்யாக புகார் தெரிவித்து, பணம் பறிக்க முயன்றதாக ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடை ஒன்றில் நேற்று வாடிக்கையாளர்கள் சிலருக்கு பிரியாணியுடன் பரிமாறப்பட்ட சாம்பாரில், புழு இருந்ததாகப் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள், சம்மந்தப்பட்ட பிரியாணிக்கு கடைக்கு சென்று ஆய்வு நடத்தினர். இந்த நிலையில், கடையின் உரிமையாளர், தனது கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் சிலர், சாம்பாரில் புழு இருந்ததாகப் பொய்யான புகார் கூறி பணம் பறிக்க முயன்றதாக சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சூரமங்கலம் காவல்துறையினர், சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், அவரது நண்பர்களான பாஸ்கரன், சதீஸ்குமார், கோபிநாத், கணேசன், பிரபு ஆகியோரை கைது செய்தனர்.