ADVERTISEMENT

சிவசுப்பிரமணியத்துக்கு தடை விதித்த நீதிமன்றம்! தீர்ப்பு விவரங்கள்!

08:00 PM Jul 30, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிவசுப்பிரமணியம் என்பவர் சமீபமாக வீரப்பன் பற்றி நான்கு புத்தங்களை பதிப்பித்துள்ளார். மேலும் தனது யூடியூப் சேனலில் பேசி வருகிறார். அவர் ஏற்கனவே எழுதி வெளியிட்ட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு முற்றிலும் மாறாக வீரப்பனை சந்தித்த நிகழ்விலும், நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டு, அவரை மீட்பதற்காக அரசாங்க தூதுவராக நக்கீரன் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற மீட்புப் பணிகள் குறித்தும் தவறான தகவல்களை எழுதியிருக்கிறார். வீடியோவிலும் அவ்வாறே பேசியுள்ளார்.

இந்த அவதூறு நடவடிக்கை சம்மந்தமாக 29.07.2021 வியாழக்கிழமை அன்று சென்னை இரண்டாவது கூடுதல் மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இதுபோன்ற அவதூறு செய்திகளை வீடியோ மற்றும் யூடியூப் பக்கங்களில் பரப்பக்கூடாது என சிவசுப்பிரமணியம் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் என். மனோகரனுடைய வாதத்தையும், ஆவணங்களையும் பரிசீலனை செய்த நீதிமன்றம் சிவசுப்பிரமணியம் இனி இந்த விஷயத்தைப் பற்றிய வீடியோக்கள் எதையும் பதிவேற்றக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இந்த உத்தரவில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள விவரங்கள்...

நக்கீரன் குழுவில் ஒரு நபராக இருந்து வீரப்பனை சந்தித்து வந்த சிவசுப்பிரமணியம் தற்போது தான் பணிபுரிந்த நிறுவனத்துக்கு எதிராகவும் தானே முன்பு பதிவு செய்த தகவல்களுக்கு முரணாகவும் எந்தவித ஆதாரமும் இன்றி அவதூறு பரப்பி வருகிறார் என்று அறியப்படுகிறது.

ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப யாரும் எழுதுவதை நீதிமன்றம் எதிர்பார்க்கவில்லை. வழக்கு தொடுத்துள்ள நக்கீரன் ஆசிரியர் குறித்து சிவசுப்பிரமணியம் பேசுவதை உடனடியாக தடை செய்யாவிட்டால் அதனால் ஏற்படும் இழப்பை பணம் கொண்டு ஈடு செய்ய முடியாது. எனவே அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் எதிலுமே இத்தகைய தகவல்களை எழுதவோ பேசவோ கூடாது என்று வரும் 19.08.2021 வரை சிவசுப்பிரமணியத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT