மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா இன்று (22/07/2021) செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 5- ஆம் தேதி வரை (மேலும் 14 நாட்கள்) நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, காவல்துறை வேனில் சிவசங்கர் பாபாவை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த போது, அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்து முழக்கமிட்டனர். பெண்கள் அழுகுரலோடு பாபா, பாபா என வேனில் இருந்த சிவசங்கர் பாபாவை பார்க்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.