Advertisment

புழல் சிறையில் சிவசங்கர் பாபா...

Sivashankar Baba in Pulhal jail ...

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார்கள். இதுதொடர்பான வழக்கில்சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை நடைபெற்றுவந்தது.

Advertisment

இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிவசங்கர் பாபா, மீண்டும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறையில் அடைப்பதற்காக சிவசங்கர் பாபாவை காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். சிவசங்கர் பாபாவை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை வர இருக்கிறது. அப்போது மீண்டும் சிவசங்கர் பாபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள் போலீசார்.

Advertisment

jail police Sivasankar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe