/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siva1 (1).jpg)
பாலியல் வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்தனர். அங்கு சிவசங்கர் பாபாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை நிலையில், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்திஅரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில் பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர்களிடம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, பாலியல் விவகாரங்களில் சிவசங்கர் பாபாவுக்கு உதவியதாக அவரின் பக்தர் சுஷ்மிதா என்பவரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே, சிவசங்கர் பாபாவை 10 நாள் காவலில் எடுக்க சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)