cpcid

Advertisment

முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாகத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் விசாரணைநடத்தப்பட்ட நிலையில்,பள்ளியில் உள்ள சொகுசு அறைக்கு நேராக அழைத்துச் சென்று தற்போது விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், ஆபாசமாகப் பேச பயன்படுத்திய பள்ளியின் மெயில் ஐடி, பென் ட்ரைவ், சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சிவசங்கர் பாபாவின் கைரேகை பதிவை வைத்து அவர்பயன்படுத்திவந்த ரகசிய அறையைத் திறந்து சோதனையிட சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.