Sivasankar Baba seeks bail ... Supreme Court refuses!

செங்கல்பட்டில் இயங்கிவந்த சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளரான சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். தற்போதுவரை சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்குகள் உள்ள நிலையில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பிணை கோரி சிவசங்கர் பாபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கீழமை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் சிவசங்கர் பாபா தரப்பு பிணை கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார். சிவசங்கர் பாபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுஇன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தநிலையில், உச்சநீதிமன்றத்திலும் சிவசங்கர் பாபாவுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. சிவசங்கர் பாபாவின் பிணை மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக காவல்துறை இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தது.