sivasankar baba cbcid police pocso court order

Advertisment

சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியின் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை இன்று (28/06/2021) மீண்டும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

அப்போது, சிவசங்கர் பாபாவை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து, நீதிபதி தமிழரசி சிவசங்கர் பாபாவை மூன்று காவலில் எடுத்து விசாரித்த சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.