ADVERTISEMENT

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு... 5 ஆசிரியைகளை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி திட்டம்!

11:50 AM Jul 16, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கை போக்சோ பிரிவுக்கு மாற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சிவசங்கர் பாபா கடந்த 13ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்னதாக சிவசங்கர் பாபாவை அவரது பள்ளியில் உள்ள சொகுசு அறைக்கு நேராக அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், ஆபாசமாகப் பேச பயன்படுத்திய பள்ளியின் மெயில் ஐடி, பென் ட்ரைவ், சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியைகள் 5 பேரை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதுவரை 18 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன.

புழல் சிறையில் உள்ள அவர் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா, கடந்த 13ஆம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, சிவசங்கர் பாபாவை வரும் 27ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சுசில் ஹரி பள்ளியின் ஆசிரியைகள் 5 பேரை வரும் திங்கட்கிழமை முதல் அழைத்து விசாரணை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் அந்தப் பள்ளி ஊழியர்களிடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT