/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/district collector transfer.jpg)
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஒரு சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை தற்காலிக பணியிட மாற்றம் செய்தது. அப்போது, திருச்சி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர் சிவராசு.
பெட்டவாய்த்தலை சோதனைச் சாவடியில் ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் கூறி தேர்தல் ஆணையம் அவரை தற்காலிகமாக பணியிட மாற்றம் செய்திருந்தது. மாவட்ட ஆட்சியர் சிவராசனுக்கு பதிலாக திவ்யதர்ஷினி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தற்போது மீண்டும் சிவராசு ஐ.ஏ.எஸ் திருச்சி மாவட்ட ஆட்சியராக பொறுப்பை ஏற்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. திருச்சி உட்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Follow Us