Advertisment

தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட சிவனடியார்கள்! 

Sivanadiyars besiege Tashildar's office!

Advertisment

திருச்சி, கீழவயலூர் பகுதியில் வேதபுரீஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது.இந்தக் கோவிலுக்குப் பல ஊர்களிலிருந்து பொதுமக்களும், சிவனடியார்களும் வந்து செல்வார்கள்.இந்நிலையில், அவ்வூரைச் சேர்ந்த சிலர் கோவிலுக்குள் பட்டியல் சமூகத்தினரை அனுமதிக்க மறுப்பதாகவும், கடந்த 8 தினங்களுக்கு முன்பாக கோவிலை மூடியுள்ளதாகவும், கோவிலுக்கு வரும் பாதையை அடைப்பதாகவும் குற்றம் சாட்டி 50க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் இன்று (12.11.2021) ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் அலுவலகத்தில் சிவனடியார்கள் பாடலைப் பாடி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

temple trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe