Skip to main content

குமாி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க 112 கி.மீ சிவாலய ஓட்டம்...

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

குமாி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற 12 சிவன் கோவில்கள் உள்ளன.  மகாசிவராத்திாியையொட்டி பக்தா்கள் ஒரே நாளில் இந்த 12 கோவில்களுக்கும் சென்று வழிபட்டு வருகின்றனா். நடந்து சென்றே ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபடுவது பிரதானமாக உள்ளது. இதற்காக கேரளா மற்றும் தமிழகத்தின் குமாி மாவட்டம் மட்டுமில்லாமல்  பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். இன்று மாலை இந்த சிவாலய ஓட்டம் நடந்தது.
 

sivalaya ottam



சிவாலயம் ஓடும் பக்தா்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து காவி உடையணிந்து கொண்டு  கையில் விசிறியுடன் "கோவிந்தா...கோபாலா" என்ற கோஷத்துடன் முன்சிறை திருமலை மகாதேவா் கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கினாா்கள். தொடா்ந்து வாிசைப்படி திக்குறிச்சி மகா தேவா் கோயில், திற்பரப்பு மகாதேவா் கோயில், திருநந்திகரை சிவன் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவா் கோவில், திருபன்றிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவா் கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக் கோடு மகாதேவா் கோவில், திருவிதாங்கோடு மகாதேவா் கோவில், திருபன்றிகோடு மகாதேவா் கோவில் இறுதியாக நட்டாலம் சங்கரநாராயணா் கோவிலில் ஓட்டத்தை முடித்து கொள்கின்றனா். 
 

இதற்காக 112 கி.மீ தூரத்தை இரவும் பகலுமாக கடக்கின்றனா். இதேபோல் இருசக்கர வாகனம், காா், வேன் போன்ற வாகனங்களிலும் பக்தா்கள் செல்கின்றனா். சிவாலயம் ஓடும் பக்தா்களுக்கு வழி நெடுகிலும் மோா், சா்பத், பழம், கஞ்சி போன்ற உணவுகளை பொதுமக்கள் வழங்குகிறாா்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவராத்திரி விழா; 17 குழந்தைகளுக்கு நேர்ந்த விபரீதம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Shivaratri festival; Tragedy befell 17 children

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதனையொட்டி சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய் உயரழுத்த மின்கம்பி மீது உரசியுள்ளது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து குழந்தைகளை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சிவராத்திரியை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 17 சிறுவர்கள் படுகாயமடைந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ராஜஸ்தான் அமைச்சர் ஹீரலால் நாகர் கூறுகையில், “ இது மிகவும் வருத்தமளிக்கும் சம்பவம். இரண்டு குழந்தைகள் பலத்த காயம் அடைந்துள்ளனர். ஒருவர் 100% தீக்காயம் அடைந்துள்ளார். அனைத்து விதமான சிகிச்சையும் அளிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கோட்டா போலீஸ் எஸ்.பி. அம்ரிதா துஹான் கூறுகையில், “இது மிகவும் சோகமான சம்பவம். காளிபஸ்தியைச் சேர்ந்த மக்கள் தங்கள் கலசத்துடன் இங்கு கூடியிருந்தனர். ஒரு குழந்தை சுமார் 20 முதல் 22 அடி வரை உயரமுள்ள குழாயை வைத்திருந்தது. இந்த குழாய் உயர் அழுத்த கம்பியை உரசியுள்ளது. அந்த குழந்தையை காப்பாற்ற முயன்ற அங்கு இருந்த குழந்தைகள் அனைவரும் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.  ஒருவர் 100% தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாரேனும் அலட்சியமாக இருந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிதம்பரத்தில் சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
March 8th Natyanjali festival begins in Chidambaram

சிதம்பரத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி தினத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கி 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த 42 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் 43-வது ஆண்டின் நாட்டியாஞ்சலி விழா வரும் மார்ச் 8-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி முடிவடைகிறது. இதுகுறித்து சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா அறகட்டளையின் செயலாளர் சம்பந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில் சிதம்பரத்தில் தொடர்ந்து 43 ஆண்டுகளாக சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் வெளிநாடுகளில் இருந்தும் நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு அவர்களின் நாட்டியத்தை சிதம்பரத்தில் உள்ள நடராஜருக்கு அர்ப்பணிக்கின்ற தன்மையினால் இது சிறப்பு பெற்று வருகிறது. நாட்டியாஞ்சலி விழாவில் பாரம்பரியமிக்க பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகனி ஆட்டம், கதக் மற்றும் இதர வகை நாட்டிய கலைஞர்கள் 5 நாட்களும் சிதம்பரத்தில் தங்கி தங்கள் நாட்டிய அஞ்சலியை சிவபெருமானுக்கு செலுத்துகிறார்கள். இதில்  இறை உணர்வும், அர்ப்பணிப்பு உணர்வும் நிறைந்து இருப்பதால், இந்த விழா மற்ற விழாக்களில் இருந்து மாறுபட்டு சிறப்பு பெற்று வருகிறது என்றார். 

இவருடன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் அறங்காவலர் குழு தலைவர் டாக்டர்.முத்துக்குமரன், துணைத் தலைவர் வி.நடராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணபதி, மருத்துவர் அருள்மொழிச்செல்வன், முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.