Sivakasi professor case! -struggle demanding the arrest of the college principal!

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகப் பணிபுரிந்த டென்சிங் பாலையா, அக்கல்லூரியில் தேசிய மாணவர் படை (NCC) அமைப்பையும் நிர்வகித்து வந்தார். தன்னிடம் படிக்கும் கல்லூரி மாணவிக்கு சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்த அவர், ஸ்ரீவில்லிப்புத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டு அருப்புக்கோட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

இந்நிலையில், அந்தக் கல்லூரியின் முதல்வர் அசோக்கை கைது செய்ய வலியுறுத்தி, அக்கல்லூரி முன்பாக ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Advertisment

Sivakasi professor case! -struggle demanding the arrest of the college principal!

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், பாலியல் வன்கொடுமைக்கு துணைபோன கல்லூரி முதல்வர் அசோக் ஒரு குற்றவாளி என்றும், டென்சிங் பாலையாவின் கைக்கூலியாகச் செயல்பட்டார் எனவும் கோஷம் எழுப்பினர். கல்லூரி முதல்வர் அசோக்கை கைது செய்யும்வரை விடமாட்டோம் எனச் சூளுரைத்தனர்.