விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலர் அலெக்சாண்டர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/111111_118.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
சிவகாசியை அடுத்துள்ள செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் இவர், பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய நிலையில், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது வீட்டிலுள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காவல் நிலையத்தில் ஏற்பட்ட பணிச்சுமை காரணமாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலாலும் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்துகொண்ட தலைமைக் காவலர் அலெக்ஸாண்டரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட தலைமைக் காவலர் அலெக்சாண்டருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். அரசுத் துறைகளில் பணிபுரிபவர்கள், இதுபோன்ற தற்கொலை முடிவை எடுக்கக்கூடாது என்று தெரிவித்த அவரது உறவினர்கள், தற்கொலைக்கான காரணம் குறித்து ஆர்டிஓ தலைமையில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)