சிவகாசி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தப் பட்டாசு ஆலையில் பல்வேறு ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆலையில் ஆண் மற்றும் பெண் எனப் பலரும் பணிப்புரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அதிகப்படியான வெப்பத்தால் பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வு ஏற்பட்டு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெடி விபத்தில் சிக்கி ஒரு பெண் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 4 பேர்படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.