Skip to main content

சிவகாசி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை! - பேராசிரியர் கைது!

 

Sivakasi college student issue - Professor arrested!

 

விருதுநகர் மாவட்டம்-ஸ்ரீவில்லிபுத்தூர் ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் டென்சிங் பாலையா. சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவர், இதே கல்லூரியில் தேசிய மாணவர் படை (NCC) அமைப்பையும் நிர்வகித்து வருகிறார்.

 

தன்னிடம் படிக்கும் கல்லூரி மாணவிக்கு சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த மாணவியின் பெற்றோர், ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கல்லூரி பேராசிரியர் டென்சிங் பாலையா விசாரிக்கப்பட்டதில், மாணவியை பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்துள்ளது.

 

Sivakasi college student issue - Professor arrested!

 

இதனைத் தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர். பேராசிரியர் டென்சிங் பாலையாவைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அருப்புக்கோட்டை கிளைச் சிறையில் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பேராசிரியர் டென்சிங் பாலையா அருப்புக்கோட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


 

இதை படிக்காம போயிடாதீங்க !