" மத்த வண்டின்னா வேலை வைக்கும்..! இதுல அப்படி கிடையாதுல்ல.. டிமாண்டும் இருக்கு.. அதனால் தான் ஸ்ப்ளண்டர் வண்டியாக கை வைச்சு தூக்கினேன்." என காவல்துறையிடம் எத்திக்ஸ் பேசியுள்ளான் மூன்று மாவட்டப் போலீசாருக்கும் "தண்ணீக்" காட்டிய டூவீலர் திருடன்.

b

TN 63AR 8762, TN 63AU 3125 மற்றும் TN 65T 5576 ஆகிய பதிவெண் கொண்ட வாகனங்கள் குறிப்பிட்ட ஒன்றிரண்டு நாட்கள் இடைவெளியில் அப்பல்லோ மருந்தகம், டிடி நகர் ஆப்டெக் கம்யூட்டர் நிறுவனம் மற்றும் எம்.ஆர்.பி.டிஜிட்டல் ஆகிய இடங்களில் காணாமல் போனதாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் புகார் பதிவாக, சிரத்தையோடு வாகனத்தையும், திருடனையும் தேடி வந்தனர் காரைக்குடி குற்றப்பிரிவுப் போலீசார். இவர்களுக்கு உறுதுணையாக ஆங்காங்கேப் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா வீடியோக்களும் திருட்டு சம்பவத்தை படம்பிடித்துக் காட்ட, அத்தனை வண்டிகளையும் திருடிய டூவீலர் திருடன் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் நாகராஜன் என்பது முடிவானது. அதனடிப்படையில் புதுக்கோட்டைப் போலீசாரின் உதவியுடன் டூவீலர் திருடனைக் கஸ்டடி எடுத்து அவனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் எட்டு இருசக்கர வாகனங்களை மீட்டது காரைக்குடி குற்றப்பிரிவுப் போலீஸ்.

Advertisment

b

" மதுரை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் என மூன்று மாவட்டப் போலீசாருக்கும் "தண்ணீக்"காட்டியவன் அவன். தனியார் நிறுவனப் பைனான்ஸ் நிறுவனத்தில் மாதத் தவனைக் கட்டாத டூவீலர்களை சீஸிங் செய்யும் வேலைப் பார்த்து வந்த அவன், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதனையே முன் அனுபவமாகக் கொண்டு வண்டிகளைத் திருட ஆரம்பித்திருக்கின்றான். கடந்தாண்டு டிசம்பர் மாதம் காரைக்குடி வந்து நோட்டமிட்டு சென்றவனை, வேறொரு வழக்கில் சிறையிலடைத்தது புதுக்கோட்டைப் போலீஸ். கடந்த ஏப்ரல் 22 சிறையிலிருந்து வெளிவந்தவன் தொடர்ச்சியாக மறுபடியும் திருட்டுத் தொழிலை ஆரம்பித்துள்ளான்.

b

Advertisment

தொடர்ச்சியாக அவன் கை வைப்பது ஸ்ப்ளண்டர் வாகனங்களை மட்டுமே..! அது என்னடாவென்றால்..? " சார்.!! அதுக்குத்தான் டிமாண்ட் இருக்கு.. வேலையும் வைக்காது. சட்டுன்னு காசு கைக்கு வந்திடும்னு எத்திக்ஸ் பேசுறான்". திருடிய வாகனங்களை அவன் விற்பது இல்லை. அத்தனை வாகனங்களையும் புதுக்கோட்டை, கீரனூர் மற்றும் இலுப்பூர் பகுதிகளில் அடகு வைத்திருக்கின்றான். அது அத்தனையையும் மீட்டுள்ளோம்." என்கின்ற காரைக்குடி குற்றப்பிரிவுப் போலீஸ் அவனை ரிமாண்டிற்கு அனுப்பியுள்ளது.