ADVERTISEMENT

சிவகார்த்திகேயனுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா? 3 மணி நேரமாக பெண் தர்ணா

09:59 PM Apr 18, 2019 | bagathsingh

ADVERTISEMENT

சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் உள்ள ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி அறந்தாங்கி அருகில் உள்ள எருக்கலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தேன்மொழி சுப்பிரமணியன். ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்களிப்பது போல இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் வெளியூரில் இருந்து வாக்களிக்க வந்தவர். வாக்குச்சாவடிக்குச் சென்றார்.

ADVERTISEMENT


ஆனால் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று வாக்குச்சாவடி அதிகாரி சொல்ல இந்த வாக்காளர் அடையாள அட்டை இருக்கு. கடந்த 2 தேர்தல்களில் வாக்களித்து இருக்கிறேன். இப்ப எப்படி பெயர் இல்லாமல் போனது. நான் வாக்களிக்காமல் போகமாட்டேன் என்றார் தேன்மொழி.


வாக்காளர் பட்டியிலில பெயர் இல்லை என்றால் வாக்களிக்க அனுமதி இல்லை என்று அதிகாரிகள் சொல்ல, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இப்படித் தான் பெயர் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் பிறகு அனுமதி கொடுத்தார்கள். நடிகருக்கு ஒரு நீதி சாதாரண பெண்ணாண எனக்கு ஒரு நீதியா? நான் வாக்களிக்காமல் இங்கிருந்து போகமாட்டேன் என்று மாலை 5 மணி முதல் 8 மணி யை கடந்தும் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தார்.


தேன்மொழியின் தர்ணா தொடரும் நிலையில் வாக்குப் பெட்டிகளை சீல் வைக்கும் பணி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த அறந்தாங்கி டி.எஸ்.பி கோகிலா அந்த பெண்ணிடம் சமாதானம் பேசினார். ஆனால் எனக்கு ஓட்டுரிமை வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT