Advertisment

நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பொது சுகாதாரத் துறை..!

bas

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், வெங்களுர் ஊராட்சியி நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான, பொது சுகாதாரத் துறையின் மூலம், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

Advertisment

நகர்ப்பகுதிகளிலிருந்து கிராமப்பகுதி வரை உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தங்கள் ஆரோக்கியத்தை முழுமையாக பாதுகாத்து கொள்ளும் வண்ணம் பொது சுகாதாரத்துறையின் மூலம் அவ்வப்பொழுது சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு அனைவருக்கும் உடற்பரிசோதனை செய்து தேவையான ஆலோசனைகளும், மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் நோக்கம் ஒரு மனிதன் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருந்தால்தான் அந்த குடும்பம் நிலையான செல்வத்தை பெறமுடியும் என்பதேயாகும்.

Advertisment

அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், வெங்களுர் ஊராட்சி பகுதிக்கு ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் கட்டுவதற்கான பணி துவக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கட்டிடத்தில் புறநோயாளிகள் பிரிவு, மருந்து கட்டுமிடம், ஊசி போடுமிடம், ஆய்வக பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு , பிரசவ பிரிவு மற்றும் வார்டு, தொற்றா நோய் சிகிச்சை பிரிவு, மருந்தகம் மற்றும் சேமிப்பு பிரிவு என மேற்கண்ட வசதிகளுடன் கட்டப்படுகிறது. மேற்கண்ட இக்கட்டிடத்திற்காக பூமி பூஜையை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

devakottai minister baskaran sivagankai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe