குற்றங்களைத் தடுக்க போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களைக் கண்காணிக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிவகங்கை மாவட்டத்தில் 'இ-பீட்' செயலியை அறிமுகப்படுத்தினார்.

Advertisment

sivagangai sp get it the union home ministry awards technology

இதன்மூலம் ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸார், தற்போது எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை உயர் அதிகாரி இருந்த இடத்தில் இருந்தே செல்போன் மூலம் கண்காணிக்க முடியும். இதை தொடர்ந்து நீதிமன்ற இ-வாரண்ட், இ-சம்மனையும், இ-பீட் உடன் இணைத்து ரோந்து போலீஸார் மூலம் உடனுக்குடன் குற்றவாளிகளுக்கும், சாட்சிகளுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தார்.

குற்றங்களைத் தடுக்க அவர் புகுத்திய நவீன முறை தேசிய அளவில் 2-ம் இடத்தை பிடித்தது. இதனால் அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அண்மையில் விருது வழங்கப்பட்டது. தமிழக டிஜிபியும் எஸ்பி ரோஹித் நாதனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.