காரைக்குடியில் சிப்காட்டுக்கான அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சுமார் 1,253 ஏக்கர் பரப்பளவில் அமையவிருந்த சிப்காட் தொழிற்பேட்டைக்கான திட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடியில் கழனிவாசல் மற்றும் திருவேலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க இடம் தேர்வான நிலையில், கிராம மக்கள் நிலத்தை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சிப்காட் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட்டுள்ளது.