Advertisment

என்.ஐ.ஏவிடம் சிக்கிய இளையான்குடி வாலிபர்!

இலங்கையில் நடைப்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இலங்கை மற்றும் பிரிட்டன் புலனாய்வுத்துறையுடன் கைக்கோர்த்த தேசிய புலனாய்வு முகமை இலங்கை குண்டுவெடிப்பிற்கு யார் காரணம்? பின்னணி? என்பவனவற்றில் கவனம் செலுத்தி, தமிழகம் முழுவதும் சல்லடையிட்டு தொடர் சோதனை வேட்டை நடத்தி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இன்று (31/10/2019) நடந்த அதிரடிச்சோதனையில் இளையான்குடி வாலிபரின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisment

sivagangai ilayankudi NIA OFFICERS INVESTIGATION

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலைரை சேர்ந்தவர் நூர்முகமது மகனான சிராஜூதீன். 22 வயதான இவருக்கு இலங்கையில் நடைப்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது அலைபேசி அழைப்பு வந்ததாம்.! அது என்.ஐ.ஏ.விற்கு ரகசிய தகவலாக வந்ததையடுத்து என்.ஐ.ஏ.எஸ்.ஐ.சுதீஷ் தலைமையில் இரு காவலர்கள் உள்ளிட்ட டீமுடன், இளையான்குடி போலீசாரும் இணைந்து கொள்ள அதிகாலை 05.30 மணி முதல் நூர்முகமது வீட்டில் சோதனையிட்டுள்ளனர். சோதனையின் முடிவில் சிராஜீதீனிடமிருந்து செல்போன்களை கைப்பற்றி சீல் வைத்தவர்கள், சென்னையிலுள்ள என்.ஐ.ஏ.அலுவலகத்திற்கு வர அழைப்பு விடுத்து சென்றுள்ளனர். இதனால் இளையான்குடி பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.

NIA SEARCH ILAIYANKUDI sivagangai Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe