Skip to main content

வெள்ளை சேலை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடும் கிராம மக்கள் 

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

sivagangai district salugai puram villagers celebrated pongal festival 

 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை இந்த வருடம் எவ்விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில்  மாட்டு பொங்கல் திருநாள் ஆண்டு சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள சலுகை புரத்தை சேர்ந்த மக்கள் வினோதமான முறையில் கொண்டாடியுள்ளனர்.  இங்கு வசிக்கும் மக்களின் காவல் தெய்வங்களாக பச்சை நாச்சி பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனை தரிசித்து வருகின்றனர்.

 

இந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் 15 நாட்கள் விரதம் மேற்கொண்டு வளையல், மெட்டி, கொலுசு உள்ளிட்ட ஆபரணங்களை தவிர்த்து வெள்ளை சேலையில் பொங்கல் வைத்து  தங்களது காவல் தெய்வங்களை வழிபடுகின்றனர். அதுமட்டுமின்றி, பாலடி கருப்பு உள்ளிட்ட காவல் தெய்வங்கள்  ஒவ்வொரு வீடு வீடாக சென்று சாமியார் அருள்வாக்கு சொல்வதையும் அதனைத் தொடர்ந்து பெண்கள் ஒரே அளவிலான கலயத்தில் பால் எடுத்து ஊர்வலமாக வருவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இதில் நம் முன்னோர் காலம் தொட்டு அனைவரும் சமமாக தெரிய வேண்டும் என்பதற்காக, ஏழை பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் இருக்க கூடாது என்பதற்காக, இத்தகைய சடங்குகள் கடைபிடிக்கப்படுகிறது. அதிலும், வெள்ளை சேலை உடுத்துவது தங்கள் வீடுகளில் இருக்கும் கெட்ட  சக்திகள் விரட்டப்படும் என நம்பப்படுகிறது.

 

இதுகுறித்து, அந்த ஊர்மக்கள் கூறும் போது, " ஏழை பணக்காரன் வித்தியாசம் இருக்க கூடாதுனு தான், நாங்க வெள்ள சேலை கட்டிக்குறோம். எங்க முன்னோர் காலத்திலிருந்து, இந்த சடங்கை  செஞ்சிட்டு வறோம். இது அவங்க எங்களுக்கு கொடுத்த வரம்" என வியப்பாக பேசியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கதவ திறங்க..... வீட்டிற்குல் புகுந்து கண்ணில் பட்டவர்களை வெட்டித் தள்ளிய கும்பல்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
bagwari gang style Robbery in Sivaganga

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ளது கல்லுவழி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் பாரி. 40 வயதான பாரி கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி அரசி, இவருக்கு 38 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு ஜெர்லின் என்ற 14 வயது மகளும், ஜோபின் என்ற 10 வயது மகனும் உள்ளனர். வெளி நாட்டு வேலையில் பிசியாக இருந்து வரும் ஜேக்கப் பாரி, ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு பிறகு ஊருக்கு வந்து சில மாதங்கள் தங்கிவிட்டு மறுபடியும் வெளி நாட்டுக்கு சென்று விடுவார். இவரின் தந்தை சின்னப்பன். இவருக்கு 67 வயதாகிறது. இவரின் மனைவி உபகாரமேரி இவருக்கு 65 வயது ஆகிறது. 

இந்நிலையில், ஜேக்கப் பாரியின் குடும்பத்தில் உள்ள 5 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வழக்கம் போல தங்களது வீட்டில் தூங்கியுள்ளனர். அப்போது, திடீரென அதிகாலை 3 மணியளவில் யாரோ வீட்டை தட்டியதாக சொல்லப்படுகிறது. அதிகாலை நேர்த்தில் யாராக இருக்குமென நினைத்த ஜேக்கப்பின் தந்தை, எழுந்து சென்று கதவை திற்துள்ளார். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் கண் மூடித்தனமாக முதியவரை வெட்டியுள்ளது. உடனே முதியவர் சின்னப்பன் கூச்சலிட்டுள்ளார். அதனைக் கேட்டு அவரின் மனைவி மற்றும் மருமகள் பேரன் பேத்தி என அனைவரும் ஓடி வந்துள்ளனர். அப்போது, அடுத்தடுத்து ஓடி வந்த அனைவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த 5 பேரும் வீட்டுக்குள்ளேயே சுருண்டு விழுந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இந்த ஐந்து பேருக்கும் ஒரே நேரத்தில் மயக்கம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் மர்ம நபர்கள், வீட்டில் இருந்த நகை, பணம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். 

பின்னர், சிறிது நேரம் கழித்து காலையில் சிறுவன் ஜோபின் கண் விழித்துள்ளான். அப்போது, தனது அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா என அனைவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனே, சம்பவம் குறித்து உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வீட்டிற்கு சென்று பார்த்த அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர், ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் படுகாயங்களுடன் கிடந்த 5 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காளையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த மோப்ப நாய், சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடியே சிறிது தூரம் ஓடி சென்று நின்றுள்ளது. ஆனால், அந்தப் பகுதியில் உள்ள யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். இது ஒரு புறமிருக்க, இந்தக் கொடூர தாக்குதலால் கோபமடைந்த பொதுமக்கள், மதுரையிலிருந்து தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லுவழி விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, காளையார்கோவில் பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கொள்ளை கும்பல்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். 

இதனையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். அதன் பின்னர், மறியலை கைவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்து 5 பேரை சரமாரியாக வெட்டி விட்டு, கொள்ளயடித்த சம்பவம் காளையார்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கீழக்கரை ஜல்லிக்கட்டு நிறைவு; முதலிடம் பிடித்த அபி சித்தர்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Completion of lower bank jallikattu; Abhi Siddhar topper

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டது. இந்த ஏறுதழுவுதல் அரங்கத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கினை இன்று (24.01.2023) திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக மாடு பிடி வீரருடன் கூடிய ஜல்லிக்கட்டு காளை மாட்டு சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள் ஐ. பெரியசாமி எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, பி. மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையையும் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கலைஞர் சிலையுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

vck ad

தொடர்ந்து அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் தற்பொழுது போட்டியானது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் 10 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார். தலா 6 காளைகளை அடக்கி சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன், பரத் ஆகிய இருவர் இரண்டாவது இடத்தில் உள்ளனர். முதல் பரிசாக மஹிந்திரா தார் கார் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் பரிசாக பைக் வழங்கப்பட உள்ளது. அண்மையில் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அரசியல் செய்யப்பட்டதாகவும், இதற்கு முழுக்க முழுக்க அமைச்சர் தான் காரணம் எனவும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் அபி சித்தர்  குற்றச்சாட்டு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.