பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதியின்றி, கல்லூரி ஆசிரியர்கள் துணையுடன் 10 அடி ஆழத்திற்கு மிகாமல் பல லட்சம் மதிப்புள்ள கிராவல் மண் வெட்டி திருடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Advertisment

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ளது அழகப்பா பல்கலைக்கழகம். 1985 மே 5ம் தேதி துவக்கப்பட்ட இப்பல்கலைக் கழகத்தில் தமிழ், ஆங்கிலம் தொடங்கி நுண்கலை மையம், பெண்கள் ஆய்வு மையம் என 28 துறைகளை தன்னகத்தேக் கொண்டது. இப்பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் 50000 ஆயிரம் சதுரடி அளவில் சுமார் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட உள் விளையாட்டு அரங்கம் கட்ட ஒப்பந்தம் கோரப்பட்டு பொதுப்பணித்துறை ஒப்பந்தகாரர் ஒருவருக்கு பணி அளிக்கப்பட்டு பணி துவங்கி வருகின்றது.

Advertisment

sivagangai district alagappa university sand thief

இந்நிலையில், கட்டிடத்தின் தரை தளத்தை மூடுவதற்காக கல்லூரி வளாகத்திற்குள்ள இரண்டாவது கால்பந்து மைதானத்தின் தென்பகுதியில் புதர் மண்டிய இடத்தில் எவ்வித அனுமதியும் இன்றி சுமார் 10 அடி ஆழத்திற்கு 50 அடி சுற்றளவில் கிராவல் மண் தோண்டப்பட்டு கட்டிடத்தின் அருகே குவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து பேசிய சமூக ஆர்வலர் ஜான்பாலோ, "முறையான அனுமதி இல்லாமல் உடற்கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் துணையுடன் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிராவல் மண் திருடப்பட்டுள்ளது.

sivagangai district alagappa university sand thief

இது குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் விளையாடும் பகுதியாகும், இதனால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் உடனடியாக தோண்டப்பட்ட குழியை மூட நடவடிக்கைகள் எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய ஒப்பந்ததாரர் மற்றும் அவருக்கு திருட உறுதுணையாக இருந்த உடற்கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள், பல்கலைக்கழக அதிகாரிகளால் மீது வழக்கு பதிந்து மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற புகார் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது." என்கிறார் அவர்.

Advertisment

gg

சிவகங்கை மாவட்டத்தில் கிராவல் மண் எடுக்க தடை உள்ள நிலையில் சுமார் பல லட்சம் மதிப்புள்ள கிராவல் மண் விளையாட்டு மைதானம் அருகே தோண்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித அனுமதி கடிதமும் பெறப்படாமல் சிவகங்கை மாவட்டத்தில் கிராவல் மண் அள்ள நீதிமன்றத் தடை உள்ள நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.