சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த இலுப்பக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், ஸ்மார்ட் கிளாஸ் தொடங்குவதற்காக 15 நாட்களுக்கு முன்பு சுமார் 4 லட்ச ரூபாய் பெருமானமுள்ள கணினிகள், மானிட்டர், புரொஜக்டர் ஆகியவை பள்ளி அலுவலக கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இதனையறிந்த சில அடையாளம் தெரியாத நபர்கள், பள்ளி அலுவலக பூட்டை உடைத்து, அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் உட்பட, அனைத்து பொருட்களையும் திருடி சென்றுள்ளனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்க்கு வந்து காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.