siva shankar baba cbcid police former student complaint

Advertisment

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கில் ஸ்ரீ சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியர் சிவசங்கர் பாபா மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதில், ஒரு வழக்கில் 300 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையைச் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகார் அடிப்படையில் அவர் மீது போக்ஸோ வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதேபோல், பெங்களூருவைச் சேர்ந்த முன்னாள் மாணவியின் தாயார் ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக, அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தற்போது, சிவசங்கர் பாபா மீது மொத்தம் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இரண்டாவது போக்ஸோ வழக்கில் அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றன.