Skip to main content

திமுகவின் நிலைதான் மோசமாக உள்ளது-துணை சபாநாயகர் தம்பிதுரை

Published on 01/05/2018 | Edited on 01/05/2018

 

மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் 

அதிமுக நிலைமையை பற்றி பேச திமுகவிற்கு தகுதி இல்லை ஏனென்றல் அவர்களின் நிலைதான் பரிதாபமாக உள்ளது.

திமுகவின் போராட்டங்கள் பிசுபிசுத்து போய்விட்டது. 

 

thampidurai

 

1971-ஆம் ஆண்டே திமுக ஆட்சியில் காவிரி பிரச்சனையில் தீர்வுகாண வேண்டிய நிலையில் இருந்தும் அன்று ஆட்சியில் இருந்த திமுக அன்றைய பிரமர்  இந்திராகாந்தியின் பேச்சை கேட்டு காவேரி வழக்கை பின்வாங்கியது. அதனால்தான் இன்று இந்த நிலைமையை சந்தித்து கொண்டிருக்கின்றோம்.  

அதற்கு பின் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா முயற்சியால் இந்த பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை தீர்வு தராது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இப்படி பல கட்டங்களை தாண்டி  இப்பொழுதான் தீர்ப்பு வந்து காவிரி பிரச்சனையில் தீர்வை ஓரளவு நெருங்கியுள்ளோம்.  எனவே தமிழகத்தை வஞ்சித்தது திமுகதான் எனவே அவர்களுக்கு இதில் பேச எந்த ஒரு தார்மீக உரிமையும் கிடையாது.

மக்களை திசைதிருப்பும் நோக்கில் திமுக தேர்தல் நெருங்கும்பொழுதுதான் காவேரி பிரச்சனை பற்றி சிந்திப்பார்கள். தமிழையும் தமிழர்களை பற்றியும் யோசிப்பார்கள் எனக்கூறினார்.

சார்ந்த செய்திகள்