ரப்பர் தோட்ட தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/OCTOBER/12/Arb.jpg)
தமிழகத்தில்ரப்பர்விளைச்சல் உள்ள ஓரே மாவட்டம் கன்னியாகுமரி. இங்கு உற்பத்தி செய்யப்படும்ரப்பர்பால் பலவேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன் ஆசியாவில் தரம் வாய்ந்தரப்பர்பால் உற்பத்தி செய்யப்படுவதில் முதலிடத்தில் உள்ளது.
Advertisment
இங்கு தனியார் ரப்பர் தோட்டத்துக்கு நிகராக அரசு ரப்பர் தோட்டத்தில் சுமார் 1500 தொழிலாளா்கள் வேலை செய்கிறார்கள்.
Advertisment
இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு ரப்பர் தோட்ட தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து பல்வேறு போராட்டங்களை தொழிலாளா்கள் நடத்தியும் எந்த பலனும் இல்லை.
இதனால் இன்று அந்த தொழிலாளா்கள் 20 சதவிதம் போனஸ் மற்றும் 10 சதவிதம் கருணை தொகை வழங்க கேட்டு நாகா்கோவிலில் அரசு ரப்பர் தோட்ட பொது மேலாளா் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
-மணிகண்டன்
Follow Us