Advertisment

கிணற்றில் மூழ்கி சகோதரிகள் பலி! 

Sisters passes away in trichy

முசிறி அருகே உள்ள பாலபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் டிரைவர் பழனிச்சாமி. இவரது மனைவி சசிகலா. இந்தத் தம்பதியின் மகள்கள், தர்ஷினி (19) இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி.யும், மற்றொரு மகள் வேம்பு (16) இவர் பன்னிரண்டாம் வகுப்பும் படித்துவந்துள்ளனர். மகன் லோகேஸ்வரன் (13)ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பழனிசாமிக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்றுள்ளது.

Advertisment

அப்போது தாய் சசிகலாவுடன் மூன்று பிள்ளைகளும் சென்றுள்ளனர். தாய் சசிகலா வயலில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், தர்ஷனியும் ,வேம்பும் சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். அப்போது வேம்பு கிணற்றில் மூழ்கியுள்ளார். தங்கை மூழ்குவதை கண்ட தர்ஷினி தங்கச்சியை மீட்பதற்காக தண்ணீரில் குதித்துள்ளார். தங்கையை மீட்கும் முயற்சி பலன் அளிக்காத நிலையில் சகோதரிகள் இருவரும் கிணற்றில் இருந்த தண்ணீரில் மூழ்கினர். இதனை கரையின் மீது நின்று பார்த்துக் கொண்டிருந்த தம்பி லோகேஸ்வரன் உதவிக்கு ஆட்களை அழைத்து சத்தம் போட்டு உள்ளார்.

Advertisment

அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்து போன சகோதரிகள் உடலை மீட்டனர். இதையடுத்து முசிறி போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிணற்று நீரில் மூழ்கி ஒரே நேரத்தில் சகோதரிகள் பரிதாபமாக இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe