Advertisment

பாசத்துடன் அண்ணனை வாழ்த்திய தங்கை!

kanimozhi stalin.jpg

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

Advertisment

திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்றும் தணிக்கைக் குழு அறிக்கை தாக்கலாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Advertisment

அதன்படி தலைவர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திமுக தலைமைக் கழகத்தில் வேட்பு மனுவினை தாக்கல் செய்யலாம். வேட்புமனுவினை திரும்பப் பெற 27-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 27-ஆம் தேதி மாலை 5 மணியளவில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் பதவிக்கான வேட்புமனுவை அக்கட்சியின் 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம், வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக, திமுக தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் மு.க.ஸ்டாலினை அவரது சகோதரியும், திமுக எம்.பியுமான கனிமொழி ஆரத்தழுவி முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

kanimozhi mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe