Advertisment

மின்சாரம் தாக்கி அக்கா, தம்பி பலி; தமிழக அரசு நிதியுதவி

Sister, brother incident by electrocution Funded by Tamil Nadu Govt

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் மின் கசிவின் காரணமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுமி மற்றும் சிறுவனின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொம்பேரிபட்டி கிராமம், மம்மானியூரில் நேற்று முன்தினம் (05.11.2023) மாலை சுமார் 06:30 மணியளவில் சுந்தரம் என்பவரின் மகன் குமார் (வயது 6) என்ற சிறுவன் அவருடைய வீட்டில் தகரத்தினால் செய்யப்பட்டிருந்த கதவை திறக்க முயன்ற போது மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது. அப்போது விபத்திலிருந்து அச்சிறுவனை காப்பாற்ற முற்பட்ட சிறுவனின் அக்கா சு.அழகுமீனா (வயது 16) என்ற சிறுமியும், சிறுவனும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்து விட்டனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்ப சூழ்நிலையினை கருத்திற் கொண்டு கருணை அடிப்படையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் ஐந்து இலட்சம் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

brother sister dindigul
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe