sir

Advertisment

நாளை பெத்தாய் புயல் சீர்காழி அருகே உள்ள பழையாறு, திருமுல்லைவாசல், மற்றும் பரங்கிப்பேட்டை, கடலூர் வழியாக கரையைக் கடக்கும் என தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு அதிகாரி ககன் தீப் சிங் பேடி, ’’கடலூர் மாவட்டத்தில் அடுத்த 2 தினங்களுக்கு 30 செ.மீ. வரை மழையும், 70 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசும் என தகவல் பெறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையால் மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

2 நாட்களுக்கு தேவையான உணவு, குடிநீர், அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் சேகரித்து வைத்துக்கொண்டால் மழையை எதிர்கொள்ளலாம்" என கூறியுள்ளார்.

Advertisment

இதனிடையே கடலூர் மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் அலர்ட்டாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒலி பெருக்கி விளம்பரம் மூலம் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.