The single word said by the Priest... kovai incident

கோவையில் குடுகுடுப்பைக்காரர் சொன்ன ஒற்றை வார்த்தையால் அதிர்ந்த தாய் மாற்றுத்திறனாளி மகளுடன்தற்கொலை செய்துகொண்டசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ளஅப்பநாயக்கன்பாளையத்தில்வசித்து வந்தவர்53 வயதான தனலட்சுமி. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமியின் கணவர் குருமூர்த்தி இறந்துவிட்டார். இவருக்கு சசிகுமார் என்ற மகனும், சுகன்யா என்ற மகளும்உள்ளனர். இதில் சுகன்யா மாற்றுத்திறனாளி ஆவார். சசிகுமார் ஐடி கம்பெனியில் வேலையில் உள்ள நிலையில் அவர் திருமணத்திற்கு பின் தனியாக சென்றுவிட்டார். மாற்றுத்திறனாளி மகளுடன்வசித்துவந்ததனலட்சுமி வீட்டுக்கு நேற்று குடுகுடுப்பைகாரர் ஒருவர் வந்துள்ளார்.

The single word said by the Priest... kovai incident

Advertisment

வந்தவர், இந்த வீட்டில் பிரச்சனை உள்ளதாகவும், 'உங்களுக்கு வரும் பௌர்ணமிக்கு பிறகு உங்களுக்கு கை கால் விளங்காமல் போய்விடும்' என கூறியதோடு பணம் 250 ரூபாயைபெற்றுக்கொண்டு நடையை காட்டியுள்ளார் அந்த குடுகுடுப்பைக்காரன். இதனால் மனமுடைந்த தனலட்சுமி மகன் சசிகுமாருக்கு போன் செய்து இதனைதெரிவித்துள்ளார். 'இதையெல்லாம் நம்பாதீங்கஅம்மா பத்திரமா இருங்க' என கூறிவிட்டு சசிகுமார் போனை வைத்துள்ளார்.

The single word said by the Priest... kovai incident

இதனைத்தொடர்ந்து இன்று காலை தாய் தனலட்சுமிக்கு மகன் சசிகுமார் போன் செய்த நிலையில் மொபைல் சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதனால் அச்சமடைந்த சசிகுமார் பக்கத்து வீட்டில் உள்ளவர்களை சென்று பார்க்க சொல்லியுள்ளார். அப்பொழுது தனலட்சுமி வீட்டிற்குசென்று பார்த்தபொழுதுஅவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக பக்கத்துவீட்டுக்காரர்கள் மகன் சசிகுமாருக்கும் துடியலூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டின்வேறொரு பகுதியில் மாற்றுத்திறனாளியான சுகன்யாவும் தற்கொலை செய்துகொண்டது கண்டிபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவை துடியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.