Single window admission fee for businesses!

தொழில் நிறுவனங்களுக்கான அனைத்து அனுமதிகளும் ஒற்றைச்சாளர முறையில் பெறுவதற்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அரசு சார்ந்த 40- க்கும் மேற்பட்டத் துறைகள் மற்றும் அமைப்புகளின் சேவைகளை ஒரே இடத்தில் ஒருமுறை செலுத்தும் கட்டணத்தின் மூலம் பெற முடியும். நிறுவனங்களின் முதலீடுகளுக்கு ஏற்ப கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 10 கோடி வரை தொழில் விரிவாக்கம் செய்வதற்கு கட்டணமில்லை என்றும், ரூபாய் 10 கோடியில் இருந்து ரூபாய் 50 கோடி வரை விரிவாக்கம் செய்தால், ரூபாய் 2.5 லட்சம் கட்டணம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ரூபாய் 50 கோடி முதல் ரூபாய் 100 கோடி வரை தொழிலை விரிவாக்கம் செய்தால், 5 லட்சம் ரூபாயும், ரூபாய் 100 கோடி முதல் ரூபாய் 300 கோடி வரை விரிவாக்கம் செய்தால், 10 லட்சம் ரூபாயும், ரூபாய் 300 கோடி முதல் ரூபாய் 1,000 கோடி வரை 15 லட்சம் ரூபாயும், ரூபாய் 1,000 கோடிக்கும் மேல் விரிவாக்கம் செய்தால் 20 லட்சம் ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.