அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமைக் குறித்த விவகாரம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் நான்காவது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த ஆலோசனையில் மனோஜ் பாண்டியன்,வைத்தியலிங்கம்,மைத்ரேயன்உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் தம்பிதுரை நேற்று (16/06/2022) சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசியிருந்த நிலையில், இன்று (17/06/2022) காலை 11.00 மணிக்கு ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
ஆலோசனைக்குப்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர்வைத்திலிங்கம், "அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் இல்லாமல் ஒற்றைத்தலைமைக் குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது செல்லாது. இருவரது ஒப்புதலின்றிக் கொண்டு வரப்படும் தீர்மானம்செல்லாது. ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ்.பதவிகளைப்பொதுக்குழுவில் வைத்து நீக்க முடியாது.
ஒற்றைத் தலைமைப் பிரச்சனையைத் தீர்ப்பது பற்றி ஓ.பன்னீர்செல்வத்தைகட்சியின்எம்.பி. தம்பிதுரை சந்தித்துப் பேசினார். ஓ.பி.எஸ். தனது கருத்தை தம்பிதுரையிடம் தெரிவித்துள்ளார். பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமைப்பற்றி தீர்மானம் கொண்டு வந்தால், அ.தி.மு.க. அழிவைநோக்கிச்செல்லும். கட்சியை வலுப்படுத்தி மீண்டும்ஆட்சிக்குகொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்பொன்னையன், "ஒற்றைத் தலைமை கோரிக்கை தவறு அல்ல;யார்வேண்டுமானாலும் வரலாம்.திட்டமிட்டபடிவரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று அ.தி.மு.க.பொதுக்குழுக்கூட்டம் நடக்கும்" எனத் தெரிவித்தார்.