
தென்காசியில் தனியாக சென்ற மசாலா வியாபாரியை கரடி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கருத்தலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வைகுண்ட மணி. சிவசைலத்தில் இருந்து பெத்தான்பிள்ளை என்ற கிராமத்திற்கு மசாலா பொருட்களை வியாபாரத்திற்காக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றுள்ளார். வனப்பகுதியின் நடுவுவிலான சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென குறுக்கே வந்த ஒற்றை கரடி, இருசக்கர வாகனத்தை கீழே தள்ளியதோடு வியாபாரி வைகுண்ட மணியை கடித்து குதறியது.

அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் வந்த கிராம மக்கள் கரடியை விரட்டி விட முயன்ற நிலையில், நாகேந்திரன், சைலேந்திரன் என்ற இருவரையும் அந்த கரடி கடித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்தவனத் துறையினர் கரடி தாக்கியதில் படுகாயமடைந்த மசாலா வியாபாரி வைகுண்டமணி, நாகேந்திரன், சைலேந்திரன் ஆகிய மூன்று பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்பொழுது மூன்று பேரை கடித்த கரடியை வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்திப் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)