Advertisment

பாடகர் டி.எம்.எஸ். சிலையைத் திறந்து வைக்கும் முதல்வர்

Singer T.M.S. Chief Minister inaugurating the statue

Advertisment

திரைத்துறையில் கிட்டத்தட்ட 10,100 பாடல்களுக்கு மேல் பாடி இன்றும் குரல் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மறைந்த பாடகர் டி.எம். சௌந்தரராஜன். 60 வருடங்களுக்கு மேலாகத்திரைத்துறையில் பயணித்த இவர் தமிழைத் தவிர சௌராஷ்டிரா, கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ளார். முதல் பாடலைத்தனது 24வது வயதில் பாடினார். கடைசிப் பாடலை 88வது வயதில் பாடினார். தனது 90வது வயதில் உடல்நலக்குறைவால் 2013 ஆம் ஆண்டு காலமானார்.

அவரை கௌரவிக்கும் வகையில் டி.எம். சௌந்தரராஜனின் 100வது பிறந்தநாளை ஒட்டி சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு ‘டி.எம். சௌந்தரராஜன் சாலை’ என்ற பெயரை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி சூட்டிப்பெயர்ப் பலகையைத்திறந்து வைத்தார்.

மேலும் அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி மதுரை மாநகராட்சி அலுவலகக் கட்டட வளாகத்தில் பொதுப்பணித்துறையின் மூலம் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது சிலை அருகே அமைந்துள்ள சுற்று வேலிகளில் இசைக்கருவிகளின் படங்கள் இடம் பெற்றுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்றுதிறந்து வைக்கிறார்.

madurai statue singer TMS
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe