Advertisment

தீவிர சிகிச்சைப் பிரிவில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்...

singer spb in critical condition at hospital

Advertisment

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். முதலில் அவரது உடல்நிலை குறித்துமருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல்நலம் சீராக இருப்பதாகத் தெரிவித்தது. அதேபோல எஸ்.பி.பி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவிலும், தனக்கு லேசான கரோனா தொற்றுதான் எனவும் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், அவரது உடல்நலம் குறித்து இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ளஅறிக்கையில், "எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13-ஆம் தேதி இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவ நிபுணர்கள் குழுவின் அறிவுரைகளின்படி அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது உயிர்காக்கும் கருவிகளுடன் இருந்து வரும் அவரது உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona virus spb
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe