/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bharathi111 (1).jpg)
சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்திய தகவல் வெளியானது.
இதனிடையே இயக்குனர் பாரதிராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் எஸ்.பி.பி. சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வந்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரதிராஜா, “துக்கம், வருத்தத்தில் இருக்கும்போதோ, சில சூழ்நிலைகளிலோ வார்த்தை வராது. பிரார்த்தனைக்கு பலனில்லை; சிறிது நம்பிக்கை இருக்கிறது” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
எஸ்.பி.பி. சிகிச்சை பெற்று வரும் எம்.ஜி.எம். மருத்துவமனை காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)